search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமான பெண்"

    • கணவனுடன் செல்ல மறுத்து தாயுடன் சென்றதால் பரபரப்பு
    • மன வருத்தத்தில் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றதாக தெரிவித்தார்

    மணவாளக்குறிச்சி :

    மணவாளக்குறிச்சி அருகே பிள்ளை யார்கோவில் பகுதியை சேர்ந்தவர் நேவிஸ் ஜெயராஜ் இவரது மனைவி எலிசபெத் ராணி( வயது27).இத்தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    எலிசபெத் ராணி செல்போனில் நீண்டநேரம் பேசுவாராம். இதை கணவர் கண்டித்தார். இந்த நியைில் கடந்த வாரம் எலிசபெத் ராணி பள்ளிக்கு சென்று குழந்தையை அழைத்து வருவதாக மாமியாரிடம் கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நேவிஸ் ஜெயராஜ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான எலிசசெத் ராணியை தேடி வந்தனர்.அவரது செல்போன் சிக்னல் மூலம் தேடியதில் எலிசபெத் ராணி வேளாங்கண்ணியில் இருந்தது தெரிந்தது.உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.தகவலறிந்த கணவர் நேவிஸ் ஜெயராஜ் மற்றும் எலிசபெத் ராணியின் தாயும் போலீஸ் நிலையம் வந்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் கணவர் தன்னை திட்டியதால் மன வருத்தத்தில் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றதாக தெரிவித்தார்.பின்னர் அவர் கணவருடன் செல்ல விருப்பமில்லாமல் தாயுடன் செல்வதாக கூறினார்.இதையடுத்து போலீசார் அவரை தாயுடன் அனுப்பி வைத்தனர்.

    • வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டில் மலர்கொடி இல்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மலர் கொடியை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி மலர்கொ டி (24). அண்ணா மலை பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கடந்த ஒரு வாரமாக தகராறு ஏற்பட்டு சண்டை போட்டு வந்துள்ள னர்.

    நேற்று வழக்கம்போல் அண்ணாமலை வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டில் மலர்கொடி இல்லை.

    மேலும் வீட்டில் போன், தாலி, கொலுசு ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு மலர்கொடி மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து அண்ணாமலை பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மலர் கொடியை தேடி வருகின்றனர்.

    • மனநல ஆலோசனை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப் பட்டு வந்தது
    • கலெக்டர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்

    திருப்பத்தூர்:

    பீகார் மாநிலம் சுயா மாவட்டம், பெலகன்ஜ் தாலுகா, பெல் லாடி அடுத்த சங்கர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் விஸ்வகர்மா. இவரது மனைவி காயத்ரிதேவி (வயது 44). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென காணாமல்போய்விட்டார். பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த பெண்ணை பொது மக்கள் மீட்டு, திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் பெண்கள் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஊர், பெயர் சொல்லத் தெரியாதநிலையில் இருந்த அவருக்கு மருந்து, மாத்திரைகள், மனநல ஆலோசனை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப் பட்டு வந்தது.

    பின்னர் பீகாரில் உள்ள சங்கர்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காயத்ரி தேவியின் இருப்பிடத்தை கண்டறிய நடவடிக்கை எடுத்து அதன் விளைவாக காயத்ரி தேவியின் கணவர் விஸ்வநாத் விஸ்வகர்மா, மகன் சத்யாகுமார், சகோதரர் முகேஷ், மைத்துனர் மொகல் ரிங்கிதேவி, தம்பி பிண்டுவின் மனைவி ரஞ்சுதேவி ஆகியோர் மறுவாழ்வு இல்லத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டனர்.

    அங்கு காயத்ரிதேவியை நேரில் கண்டதும் அவரது கணவர் மற்றும் மகன் ஆனந்த கண்ணீர் வீட்டு கட்டி தழுவினர்.

    அதைத்தொடர்ந்து அந்தப்பெண்ணை கலெக்டர் அலுவல கத்தில் அவரது உறவினர்களிடம் கலெக்டர் பாஸ்கரபாண் டியன் ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும், மருத்துவரிடம் காண்பித்து, மருத்துவரின் ஆலோசனையின் படி நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூறினார். மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் மனநல காப்பக நிர்வாகிரமேஷ் மற்றும் சமூகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 வருடமாக கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
    • தனது மகளுடன் வீட்டை விட்டு சென்ற அருள்ஜோதி மாயமானார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கோகிலாபுரம் சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் அருள்ஜோதி(30). இவரு க்கும் கோவையை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரு க்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பயோஜாஸ்ரீ(10) என்ற மகள் உள்ளார்.

    கருத்துவேறுபாடு காரணமாக அருள்ஜோதி கடந்த 6 வருடமாக கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது மகளுடன் வீட்டை விட்டு சென்ற அருள்ஜோதி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து செல்வராஜ் உத்தமபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சரோஜாவை, அவரது மகன்கள் கண்டித்து உள்ளனர்.
    • இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சரோஜா, கடந்த 15-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி, குட்டை தெருவைச் சேர்ந்த வர் பழனிச்சாமி. இவரது மனைவி சரோஜா (வயது 48). கூலித்தொழிலாளி.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சரோஜாவை, அவரது மகன்கள் கண்டித்து உள்ளனர்.

    இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சரோஜா, கடந்த 15-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன சரோஜாவை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

    இந்நிலையில் நேற்று வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு பின்புறம் உள்ள கிணற்றில், அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் மிதப்பதாக வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், கிணற்றில் இறந்து கிடந்தவர், வேல கவுண்டம்பட்டி, குட்டை தெருவைச் சேர்ந்த சரோஜா என்பது தெரியவந்தது.

    சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 19 மாதங்களுக்கு முன்பு மாயமான பெண்ணை இதுவரை கண்டுபிடிக்காதது ஏன்? என்று போலீசாருக்கு, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    • மனுதாரர் மனைவியை ஒரு வாரத்தில் மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா தூங்கா ரெட்டியபட்டியைச் சேர்ந்த சிவக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனக்கும், சங்கீதா என்பவருக்கும் கடந்த 2011 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பாளையத்தில் தனி குடித்தனம் இருந்தோம். என் மனைவி டெய்லராக இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 6.3.2021-ந் தேதி அன்று எனது மனைவி மாயமானார். இது தொடர்பாக புதியம்பட்டி போலீசில் புகார் செய்தேன். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை என் மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்க எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு (பொறுப்பு) தலைமை நீதிபதி டி.ராஜா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனு தாரர் வக்கீல் சத்திய மூர்த்தி ஆஜராகி, மனுதாரர் மனைவியை கண்டு பிடிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    19 மாதங்களாக அவரை கண்டுபிடிக்கவும் இல்லை. இந்த வழக்கை முடித்து வைக்கவும் இல்லை. எனவே போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரர் மனைவியை மீட்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    அப்போது நீதிபதிகள் மனுதாரர் மனைவியை கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? என கேள்வி எழுப்பினர்.

    விசாரணை முடிவில், மனுதாரர் மனைவியை ஒரு வாரத்தில் மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    ×